மேல்நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் முதலிய நாடுகளில் அணு ஆயுதம் முதல் புதிய கண்டுபிடிப்புகள் வரை நிறைய கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
நாமும் சுதந்திரம் அடைந்ததிலிருந்து தற்போது வரை அவர்களைவிட விரைவாகவே முன்னேறிக் கொண்டு வருகிறோம்.
நாம் வாழ்க்கையை நேர்மையாய், ஒழுக்கமாய் இப்படித்தான் வாழ வேண்டும் என நமது பாரத நாட்டு கலாச்சாரமும் ராமாயணமும் மகாபாரதமும் சொல்கின்றன; புத்தரும் வள்ளுவரும் மாவீரரும் சொல்கிறார்கள்.
அமெரிக்காவில் வயது வந்த ஆணும் பெண்ணும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். மறுமணம் எத்தனை தடவை செய்தாலும் தப்பு கிடையாது என்கிறது அங்குள்ள அரசியல் சட்டம்.
பிள்ளைகள் சில நாட்கள் தகப்பன் பொறுப்பிலும், சில நாட்கள் தாயின் மூலமாகவும் வளர்க்கப்படுகின்றனர்.
பொறுப்பில்லாமல் வளர்ந்தால் எப்படியிருக்கும் என நீங்களே யோசித்துப் பாருங்கள்.
மிருகங்கள், பறவைகள், ஆதிகாலம் முதல் தற்போது வரை அதனதன் இனத்துடன் மாறாமல் பாசத்தோடு தான் வாழ்கிறது.
ஆறு அறிவு படைத்த மனிதன்தான் பலபேர் இஷ்டமான பெண்களுடனும், இஷ்டமான ஆண்களிடம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
அதை பார்த்துவிட்டு வந்த இந்திய மக்களும் நமது கலாச்சாரத்தை மறந்து மேல்நாட்டு கலாச்சாராத்திற்கு போய் கொண்டு இருக்கிறார்கள். அது தவறு.
ஆகையால் தயவுசெய்து நமது கலாச்சாரத்தை மறக்காமல் ஒருத்தன் ஒருத்தியுடன் ஒற்றுமையுடன் வாழ்வோம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!