தேவையான பொருட்கள்
மைதா மாவு : 500 கிராம்
பால் : 200 மி.லி
முட்டை : 4
தேங்காய் எண்ணெய் : 1 லிட்டர்
டால்டா : 100 கிராம்
சீனி : 600 கிராம்
சோடா உப்பு : 2 டீஸ்பூன்
செய்முறை
சீனியையும், முட்டையும் நன்கு அடித்து கலக்கவும். அத்துடன் சோடாஉப்பு, டால்டா, பால் சேர்த்து கடைந்து கொள்ளவும். பின் மைதா சேர்த்து பிசைந்து சற்று கனமாக விரித்து டைமண்ட் வடிவில் கத்தியினால் வெட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான மைதா கேக் தயார்.
(இதில் இனிப்பு பதிலாக காரம் சேர்த்து தயாரிக்கலாம். இதை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம்.)
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!