மைதா மாவு மிக ஆபத்து

மைதா மாவு என்பது கோதுமையின் வடிகட்டப்பட்ட கழிவு.

அது பிணைய மிருதுவாக இருப்பதற்கு காரணம் அலேக்சான் என்ற அமிலத்தை சேர்ப்பது தான் என்பது உங்களுக்கு தெரியுமா?

பார்க்கப் பளிச்சென்று இருப்பதற்கு பெஞ்சாயில் பெராக்சைடு சேர்க்கிறார்கள். சர்க்கரை நோய் வர இதுவும் ஒரு காரணமாகிறது.

அலேக்சான் என்ற அமிலம் கணையத்தில் பீட்டா செல்களை தாக்கி அழித்து, நீரழிவு நோயை உண்டு பண்ணும் குணம் உடையது.

இதைத் தவிர செயற்கை வண்ணமூட்டி, மினரல் ஆயில், பிரிசர்வேட்டிவ சாக்ரீன், அஜினோமோட்டோ போன்ற உபரிப் பொருட்களை ருசிக்காக சேர்க்கிறார்கள்.

இவை உணவுக் குழாயில் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் குடல் அழற்சியையும் உண்டாக்கும் தன்மை உடையவை.

மைதா மாவில் செய்யப்படும் கேக், பிஸ்கட், ரொட்டி, பர்ஃபி மற்றும் புரோட்டா போன்றவற்றில் நார்சத்து, வைட்டமின்கள், தாதுசத்துக்கள் கிடையாது.

தொடர்ச்சியாக சாப்பிட்டவர்களுக்கு சிறுநீரகக்கல், இதயக்கோளாறு உள்ளிட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

மேலும் மைதாவில் உள்ள குளுட்டோன் என்கிற பொருள் எளிதில் செரிமானம் ஆகாது. தேவையற்ற உடல் பருமன் மலச்சிக்கல், தண்ணீர் தாக்கம் அதிகரிப்பு ஆகியவற்றை உண்டு பண்ணும்.

அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் மைதா மாவை பயன்படுத்த நிரந்தரத் தடை அமலில் உள்ளது.

நாம் இதை கருத்தில் கொண்டு மைதாவால் செய்யப்படும் பொருட்களைத் தவிர்ப்போம்.

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.