மொட்டுப் போல சிரிச்சதெல்லாம்
மறந்து பல வருசமாச்சு
மெல்ல தழுவும் தென்றலயும்
எதிரியாக பார்க்கலாச்சு
கொட்டும் மழை காலத்துல
குடிக்கும் நீரை வெறுக்கலாச்சு
கோடை வெயில் கொளுத்தும்போது
நெருப்பை தேடி அலையலாச்சு
பட்டதெல்லாம் போதுமென
படுத்துறங்க நெனச்சபோது
கட்டிவச்ச சோறெடுத்து
தன்னிடத்தான் பிரிச்சபோது
ஒட்டியிருந்த உயிருயிப்ப
உடலைவிட்டு பிரிஞ்சிருச்சே
சுட்டெரிக்க சுடலைக்குத்தான்
உடலும்இப்ப போயிருச்சே
நீட்டி படுத்து கிடக்கும் போது
உனக்கு என்ன சாதி சொல்லு
நீ நடந்தபோது சேர்த்த பணம்
துணைக்கு வருமா கேட்டு சொல்லு
வெட்டித்தனமா வாழ்ந்த காலம்
விரக்தியில தொலைச்சவன் நீ
வெறும்கையில் எதைத்தான் நீ
கொண்டுபோக முடியும் சொல்லு
கட்டெரும்பை போல தினம்
மத்தவங்கள கடிச்சு வச்ச
காட்டெருமை போல தினம்
முட்டி தள்ளி சிரிச்சு திரிஞ்ச
குட்டி போட்ட பூனைபோல
குறுக்கும் நெடுக்கும் அலைஞ்சு திரிஞ்ச
கூட்டி கழிச்சு கணக்கு பார்த்தா
கொண்டு போறதென்ன இப்போ?
கைபேசி: 9865802942