தாய்மொழி பற்றிய ஓர் அருமையான கவிதை
தள்ளாடிய நாவில் தாராளமாய்
தானாக வந்த தாய்மொழியே!
தாய்தான் உயிரும் உடலும்
மொழிதான் சொல்லும் பொருளும்!
நான் பேசும் சொற்கள்
மொழி தந்த வரங்கள்!
பேசச் சொல்லி தந்தது மொழியே
வாழ்கவே மொழித் தாயே!
கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்
மறுமொழி இடவும்