மௌனம் தான் மாற்றத்திற்கான மாற்று வழி
கடலின் மௌனம் புயலில் தெரியும்
காற்றின் மௌனம் சூறாவளியாக மாறும்
காடுகளின் மௌனம் காட்டுத்தீயில் தெரியும்
பொழியும் மழையின் மௌனம் மரங்களுக்குத்தான் புரியும்
தீயின் மௌனம் திடீர் என்றுதான் விளங்கும்
எரிமலையின் மௌனம் உள்ளே
எரிந்து கொண்டுதான் இருக்கும்
உள்ளத்தின் மௌனம் உறங்கும்போதுதான்
உருவெடுக்கும் உணர்வாய்
க.கருப்பணன்
மதுரை-625107
கைபேசி: 8838619670
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!