யானும் அவ்வண்ணமே

யானும் அவ்வண்ணமே – கவிதை

அவன் வீசும் காசிற்கு

“வாக்கினை” விற்றாய்…

அவன் வீசிவிட்டுச் சென்றான்

“வாக்கினை” மட்டும்…

 

பொன் விளைந்த மண் மீது

இரசாயன மருந்தைத் தூவினாய்

மண்ணும் மலடானது…

கதிராய் விளைந்த நெல்மணி

பதிராய்ப் போனது…

 

விளையும் நிலத்தையெல்லாம்

விலை நிலமாக்கினாய்…

விளைபொருள் அனைத்தும் இன்று

விலையாய்ப் போனது…

 

இரண்டிலும் பொய்த்துப் போனது

விவசாயி போட்ட இலாபக் கணக்கு…

 

படியரிசியிட்டு படையலிட வில்லை

பிடியரிசி போட்டு பொங்கி வைத்தேன்

படியில் வீற்றிருக்கும் காவல் ஜீவனுக்கு…

 

நானிட்ட உணவின் நன்றி மறவாமல்

எனக்கு நாடி தளர்ந்த போதிலும்

ஓடி விடாமல் எனையே நாடிவந்தது…

 

இதுதான் நியூட்டன் நிரூபித்த

மூன்றாம் விதியோ…

 

இல்லை மானுட புத்திக்கு

எட்டும் வகையில்

புத்தனுரைத்த கர்மாவோ…

 

ஆம்..

முகம் காட்டும் கண்ணாடியும்

மானுட வர்கத்திர்க்கு ஓதும்

ஒப்பிலா மறையும் இதுவே

“யானும் அவ்வண்ணமே ”

க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
6374836353