யாமினி – பகுதி 1

விடிகாலை நாலு மணிக்கே விழிப்பு வந்துவிட்டது ரேவதிக்கு. படுக்கையில் எழுந்து உட்கார்ந்தவள் கண்களைத் திறக்காமலேயே, “புள்ளையாரப்பா! முருகா!, ஆஞ்சனேயா!” என்று ஆரம்பித்துத் தனக்குத் தெரிந்த அனைத்துத் தெய்வங்களின் பெயர்களையும் கைகளைக் கூப்பிக் கண்களை மூடிக் கொண்டு மெதுவாய் உச்சரித்தாள். பிறகு கண்களைத் திறந்து இரு உள்ளங்கைகளையும் ‘பரபர’வென்று தேய்த்து இரு கைகளையும் அருகருகே வைத்துப் பார்த்தாள். தலை முடியைக் கோதிக் கொண்டாள். மெல்லப் படுக்கையிலிருந்து எழுந்து பாத்ரூம் நோக்கிச் சென்றவளை பாத்ரூம் வாசலின் டைல்ஸ் ஒட்டப்பட்டிருந்த ஒரு … யாமினி – பகுதி 1-ஐ படிப்பதைத் தொடரவும்.