யாருக்காக?

படிக்கும் போதே ஒரு குறிக்கோளுடன்படிக்க வேண்டும்.

நம்முடைய இலக்கு என்ன?

எதற்காக படிக்கிறோம்?

இந்த சமுதாயத்தில் நம் பங்கு என்ன?

என்பதைப் பற்றிய ‘புரிதல் ‘ நம்முடைய குழந்தைகளுக்கு அறவே இல்லை என்றே சொல்ல வேண்டும்.

என்னுடைய மகன் +2 வகுப்பிலும், மகள் 10வது வகுப்பிலும் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் 60 வருட வாழ்க்கையை (அமைத்துக் கொடுப்பது) பற்றி அலுத்துக் கொண்டே, “என்ன நான் சொல்வது சரிதானே?” என்றபடி காலை பத்திரிக்கை செய்திகளை படித்துக் கொண்டே மனைவி கொண்டு வந்த காப்பியை சிறிது தொண்டையில் நனைத்தபடியே வினவினேன்!

“எல்லாம் சரி, ஆனா ஒன்றும் எனக்கு சரியாக படலே”

“என்ன?”

“ஆமா போங்க, நாலு நாளா நம்ப சமைய பாத்திரம் சுத்தம் செய்றவங்க வரவே இல்லை; நானும் போன் பண்ணி பார்த்தேன். எடுக்க மாட்டேங்கிறாங்க.

நம்ப பையனை ஸ்கூல் போகும் போது பார்த்து விட்டு போகச் சொன்னேன். எங்க கேட்கிறான்?

உங்க மகளைப் பற்றி பேசவே வேண்டாம். அப்படி வளர்க்கிறீர்கள். பரத நாட்டியம், கலை, ஒவியம் என்று கற்று என்ன பயன்? பெற்ற தாய்க்கு ஒரு கஷ்டம் என்று வந்தால் பதற வேண்டாமா?”

“நீ சொல்றது எனக்கு புரியுது; என்னை என்னச் செய்ய சொல்ற?”

“ஒண்ணும் செய்ய வேண்டாம். என் குறைய மட்டும் சொன்னேன் .அவ்வளவுதான். முடிந்தால் வேறு ஏற்பாடு செய்யவும்; இல்லையேல் எல்லோரும் சேர்ந்து “Swiggy” ஆர்டர் பண்ணி சாப்பிடுங்க. எனக்கு மட்டும் தான் என்னால் சமைக்க முடியும்” அந்த நொடியில் அவள் வாழ்ந்தாள்.

‘அடிப்பாவி! இப்படி சுயநலக்காரியாகி விட்டியே! இது அடுக்குமா?’

எழுந்து என்னைப் பார்த்தாள்.

பார்த்த பார்வை அப்படியே இருந்தது.

என் மீது சாய்ந்தாள்.

செல்வராஜ் ராமன்
18/33, நெல்லு கடைத்தெரு
கும்பகோணம் – 612001
கைபேசி: 9095522841