யாரு?

பட்டுப்பூச்சி வேகமாக பறக்குது பாரு – அதுக்கு
பளபளக்கும் சட்டை போட்டது யாரு

வெட்டுக்கிளிக்கு வெட்டரிவாள் தந்தது யாரு – அதை
விடியவிடிய வேலை செய்ய சொன்னது யாரு

வட்டப்பூவை மொட்டுப்போல தச்சது யாரு – அதில்
வாசனையை போட்டு பூட்டி விட்டது யாரு

குட்டி வண்டை பாட்டுப்பாட சொன்னது யாரு – அதை
குடம்குடமா தேன் எடுக்க சொன்னது யாரு

முட்களோடு பூக்களையே சேர்த்தது யாரு – அதை
காற்றை வைத்து தள்ள சொன்னது யாரு

தட்டாணின் வாலை நீட்டி விட்டது யாரு – அதன்
தலையில் பெரிய கண்களை வச்சது யாரு

எட்டெனவே திசையை எண்ணி வச்சது யாரு –தினம்
எழும் சூரியன் கிழக்காலே விட்டது யாரு

இறைவன் என்றே ப‌லர் சொல்லுவாரு – ‍ அதை
இயற்கை என்றே சிலர் சொல்லுவாரு

இரண்டும் வேறுவேறா நீ கூறு ‍- அதை
என்றும் மனதில் எண்ணிப் பாரு

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.