பாலர் பள்ளிக்கு செல்லும்
அந்த வீதியின் குழந்தைகளிடம்
ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
உனக்கு எந்த டீச்சரைப் பிடிக்கும்?
பெரும்பாலான குழந்தைகள்
சொன்ன பதில்
அழகான டீச்சரைப்பிடிக்கும்!
யார் அந்த அழகான டீச்சர்?
எவரையும் தனித்து
உறுதிபடுத்த இயலவில்லை!
குழந்தைகள் கூறும் அழகு
அன்பின் அடையாளம்
அரவணைப்பில் அடையாளம்
இன்பத்தின் அடையாளம்
இனிமையின் அடையாளம்!
ஆம்!
எங்கு அன்பு மிகுதியாக உள்ளதோ
அதுவே அழகு!
காற்றும்கூடத் தென்றலாய்
தழுவும் போதுதான் அழகு!
கடலலையும்கூடத் தவழும் போது தான் அழகு!
வெயிலின் போது கிடைக்கும்
நிழலும் கூட அழகு தான்!
இப்படியாக எங்கு அன்பு தளும்புகிறதோ
அதுவே சிறந்த அழகு!
வாழும் வரையில் நாமும்
அன்பை விதைப்போம்!
அழகாய் மிளிர்வோம்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!