யார் அந்த யார்?

பொண்ணுங்க படிக்கிறாங்க
பையன்க குடிக்கிறாங்க

போலீஸ் அடிக்கிறாங்க
பொலிட்டீசியன் நடிக்கிறாங்க

விவசாயி நஷ்டப்படுறான்
வயசுப்பசங்க கஷ்டப்படுறான்

யாருக்குமே இல்ல பயபக்தி
மக்களுக்கு இல்ல சுயபுத்தி

விளக்குமாறு தலைநகர ஆளுது
டீ கடை நாட்டையே ஆளுது
கையெழுத்து போட
தெரியாதவன் கல்வி மந்திரி

நாம கோட்டைக்கு அனுப்புறோம்
நம்மள ரோட்டுக்கு அனுப்புறான்

படிச்சவனுக்கு தெரிஞ்சதெல்லாம்
பேஸ்புக் வாட்சப் ட்விட்டர் குரூப்

மெசேஜ்ல
ஓம் நமசிவாய
பத்து பேருக்கு பத்து நிமிடத்தில்
அனுப்பவில்லை யென்றால்
24 மணி நேரத்தில்
கெட்ட செய்தி வரும்

ஜெய் ஹனுமான்
இத 50 பேருக்கு
அனுப்பவில்லை யென்றால்
கிட்னி சட்னியாயிடும்

தனியா இருக்கிறவன் சாதிக்கிறான்
பேமிலியா இருக்கிறவன் கஷ்டப்படுறான்

பொண்டாட்டியோ பொலிடிஸியனோ
அடுத்தவன் பேச்சுதான் கேக்குறாங்க

நாட்டுல பட்டினி கெடக்குறாங்க
யோகா செய்ய சொல்றாங்க

பாக்கெட்ல பணமில்லை
பேங்க் அக்கௌன்ட் ஓபன்
பண்ண சொல்றாங்க

இருக்க இடமில்லை
கழிப்பறை கட்டுறாங்க

சாதாரண பெட்டி இல்ல ரயிலுல
புல்லட் ரயில் விடுறாங்க

கிராமத்துல கரண்ட் இல்ல
டிஜிட்டல் இந்தியா பண்றாங்க

அரிசி விலை கூடிப்போச்சி
ஆடி கார் வெல குறைக்கிறாங்க

ஜாதி குப்பை மண்டையில
கிளீன் இந்தியா கொண்டாடுறாங்க

அகர்பத்தியில ரெண்டுவகை
ஒன்னு கடவுளுக்கு
இன்னொன்னு கொசுவுக்கு
கடவுள் வர்றதே இல்ல
கொசு போறதேயில்லை

மாறும் மாறும்னு
நெனைச்சிகிட்டே இருந்து
மாறும்ங்கிற வார்த்தை மட்டுமே
மாறிப் போனது
வேற எதுவும் மாறவேயில்லை

யாராவது மாத்தமாட்டாங்களான்னு
நெனைச்சிகிட்டே இருக்கோம்
அந்த யார்
யாருன்னுதான் இதுவரைக்கும் தெரியல

ஏழ்மையை நெனைச்சி
ஏழை ஏங்குறான்

ஏழையைப் பயன்படுத்தி
பணக்காரன்
பணத்துல தூங்குறான்

உண்மை என்னான்னா
நல்லவன் நிலைக்கிறதில்ல
இல்லன்னா
அவனை இருக்க விடுறதில்ல!

இதெல்லாம் மாறியிருக்கே தவிர

மாற வேண்டியது எதுவுமே மாறல!

எங்கே செல்கிறோம் நாம்?

என்றாவது சிந்தித்ததுண்டா?

வளர்ந்திருக்கா நாடு?

இல்லை

நாம தான் மாறியிருக்கோமா?

பொய்கை கோவி அன்பழகன்
மயிலாடுதுறை

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.