கூர்மையான மூக்கு வச்சு…
கூட இரண்டு இறக்கை வச்சு…
கூட்டமாக கூடி நின்று…
கோகோ என்ற சத்தத்துடன்…
நாங்க விட்ட ராக்கெட்டு…
நாடு பல தாண்டி திரும்பி வரும் ராக்கெட்டு…
களத்து மேடு நாங்க விளையாடும் இடமாச்சு…
விளைஞ்ச கதிர் வந்தாலும் விளையாட்டு நிற்காது…
உழைச்சதுல அலுத்துப்போன ஊர் தடை சொல்லாது…
கலகலப்பா இருந்த வாழ்க்கை கனவாகிப் போச்சு….
களத்துமேடு அரசோட அலுவலகமா மாறிப் போச்சு…
உழைப்பை மறந்து ஜனங்களுமே…
உறங்கி கிடக்கும் நிலையுமாச்சு…
ஊர்காத்த அய்யனாரும் ஊமையாகிப் போனாரு…
யார் வருவா மீட்டெடுக்க? என்று மனம் ஏங்கலாச்சு…
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942