அன்பு கழித்தவன்
அல்பொருள் அறியா மருளன்
ஆக்கம் பேணான்
இரக்கம் நீத்தான்
ஈத்துவக்கு மின்ப மறியான்
உண்மை பிறழ்ந்தவன்
ஊழையே நம்பினன்
ஊக்கமே இலாதவன்
எண்ணித் துணிவிலன்
ஏதம் பெருஞ்செல்வம் தான்துய்யான்
ஐம் புலன டங்கான்
ஐய்யந் தெளியான்
ஒழுக்கம் ஓம்பான்
ஒப்புரவு ஒழுகான்,
ஓரா முறை செய்யான்
ஓர்ந்து கண்ணோடான்
இவனன்றோ இத்தொல்லுலகின் முதுவறியன்!!
சிராங்குடி த.மாரிமுத்து
மன்னார்குடி
94436 73155
மறுமொழி இடவும்