யாவும் நலமே!

பெற்ற பிள்ளையை
இழந்த தாய்க்குப்
பேருக்காவது உதவி
செய்ய ஒரு மகன்
இருந்தால் யாவும் நலமே!

வீட்டு வேலை செய்து
பிழைப்பு நடத்தும்
தாய்க்கு ஒரு வீடு
இருந்தால்
யாவும் நலமே!

அனாதையாக வாழும்
குழந்தைகளுக்கு அடுத்த
பிறவியிலாவது கடவுள்
ஒரு தாய் தகப்பனைத்
தந்தால் யாவும் நலமே!

அன்றாட வாழ்க்கையில்
அன்னம் கிடைக்காமல்
அல்லல்படும் மக்களுக்கு
ஆண்டவன் படி அளந்தால்
யாவும் நலமே!

கஷ்டப்படும் மக்களுக்கு
காசு கிடைப்பதற்கு
பதிலாகக் கல்வி
கிடைத்தால் யாவும் நலமே!

பெ.சிவக்குமார்
பி.எட் (வேதியியல்) முதலாம் ஆண்டு
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்
கைபேசி:  9361723667
மின்னஞ்சல்: sivakumarpandi049@gmail.com