யூ டூ புரூட்டஸ்

யூ டூ புரூட்டஸ்…

நம்பிக்கை துரோகத்தின்

அடையாள வசனமாக

இன்றும் என்றும் நிலையாக!

நம்முடனும் இது போன்று

புரூட்டஸ் இருக்க கூடும்!

நற்செயலுக்கு ஒரு போதும்

துணையாக வரமாட்டார்கள்!

முகஸ்துதி அதிகமாகவே இருக்கும்!

நம்முடைய

இரக்க குணத்தை

நம்முடைய பழக்கவழக்கங்களை

தமக்கு சாதகமாக மடைமாற்றம்

செய்ய முயற்சிப்பார்கள்!

எழ முடியாமல் விழும் வரை

நம்முடனே பயணம் செய்து

பிறரால் வீழ்த்தப்பட்டு அழியும் வரை

உடனிருந்து, வீழ்ந்த பின்

அதற்கான பழியையும்

நம் மீதே சுமத்தி, பின்னரே

நம்மை விட்டு விலகுவர்!

நமது உதவி செய்தல்

இரக்கம் காட்டுதல் போன்ற

குணங்களே இவர்களுக்கான ஆயுதங்கள்!

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்

என்ற வள்ளுவர்

வாக்கும் இது குறித்து தானோ?

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.