நாம் முதலில் நம் தாயின் காலில் வீழ்ந்து ஆசிபெற வேண்டும். இதைவிட பெரிய ஆசி வேறேதும் இல்லை.
குல தெய்வ வழிபாடு குலத்தைத் தழைக்கச் செய்யும், குல தெய்வத்தை யாரும் மறக்கலாகாது. அதன் பின்தான் மற்ற தெய்வங்கள் எல்லாம்.
பக்தி யோகம் – வழிபாட்டையும், பக்தியையும், ஓர் இஷ்டதெய்வத்தினிடத்தில் செலுத்தி தெய்வத் தன்மை பெறுதல்.
கர்ம யோகம் – செயல்களினாலும் கடமைகளைச் செய்வதாலும் ஒருவர் தனது தெய்வத் தன்மையை உணரும் மார்க்கம்.
ஞான யோகம் – தன்னில் நிலைபெற்ற ஆத்மாவை பற்றிய ஞானத்தை அடைதல்.