மைலேஜ் என்றால் என்ன?
ஒரு வாகனம் ஒரு லிட்டர் எரிபொருளுக்கு எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதுதான் மைலேஜ் என்ற சொல்லுக்கு விளக்கம். ரயிலின் மைலேஜ் பல காரணிகளைப் பொறுத்து அமையும்.
ஒரு ரயில் இத்தனை கிலோ மீட்டர்தான் லிட்டருக்கு கொடுக்கும் என்று உறுதியாக நேரடியாகச் சொல்வது கடினம்,
ஏனெனில் ரயிலின் மைலேஜ் அதன் பாதை, அதன் வகை (பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ், அதிவிரைவு, சரக்கு), அதில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் பயணிகள் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும்.
ஒரு ரயிலின் மைலேஜைப் பாதிக்கும் மிகப்பெரிய காரணி அது எத்தனை பெட்டிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதுதான்.
பெட்டிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மைலேஜ் கூடும். அதாவது இயந்திரம் குறைந்த சுமைகளை இழுத்தால் போதும்.
ஒரு டீசல் இன்ஜினின் மைலேஜ் ஒரு மணி நேர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
24 பெட்டிகள் கொண்ட ரயில் எஞ்சின் ஒவ்வொரு 1 கிமீ தூரத்திற்கும் 6 லிட்டர் டீசலைப் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயணிகள் ரயில்களை விட சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் குறைவான டீசலைப் பயன்படுத்துகின்றன என்ற தகவல் ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.
பயணிகள் ரயில் என்ஜின்கள் ஒவ்வொரு 1 கிமீக்கும் 5 லிட்டர் டீசலைப் பயன்படுத்துகின்றன.
பயணிகள் ரயில்கள் ஏறக்குறைய அனைத்து நிலையங்களிலும் நின்று செல்ல வேண்டியதுதான் இதற்கான காரணமாகும்.
12 பெட்டிகளை இழுக்கும் எக்ஸ்பிரஸ் ரயில் 1 கிமீ தூரம் பயணிக்க 4.5 லிட்டர் டீசல் செலவழிக்கிறது.
இந்த வகையில் பார்த்தால் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் ஒரு லிட்டர் டீசலில் 230 மீட்டர் தூரம் வரையிலும், பேசஞ்சர் ரயில்கள் 180 முதல் 200 மீட்டர் வரையிலும் தோராயமாக செல்லும்…
அதிவிரைவு வண்டிகள் பயணிகள் வண்டி போல் அடுத்தடுத்த நிலையங்களில் நின்று செல்வதில்லை.
அதிவிரைவு வண்டிகளில் இரண்டு பெட்டிகள் தவிர அனைத்து பெட்டிகளும் முன்பதிவு செய்யப்படும் பெட்டிகள். அதாவது அதிகப்பட்சமாக 72 நபர்கள் மட்டுமே அனுமதி.
பயணிகள் வண்டியில் படிக்கட்டில் தொங்கிச்செல்லும் நிலை. இதனால்தான் பயணிகள் வண்டியைவிட அதிவிரைவு வண்டிகளில் டீசல் செலவு குறைவு.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!