ரயில் பற்றிய ரகசியங்கள் 3 – ரயிலில் எழுப்பப்படும் ஒலி

ரயில்களில் ஒலிக்கும் ஹாரன் ஒலியை நீங்கள் பல முறை கேட்டிருப்பீர்கள்.

அதை நீங்கள் நன்றாக கவனித்து இருப்பீர்கள் என்றால் ஹாரன் சத்தம் சில வேளை நீண்டதாக இருக்கும். சில நேரங்களில் குறுகியதாக இருக்கும்.

சில வேளை இரண்டு முறை குறுகியதாகவோ அல்லது இரண்டு முறை நீண்டதாகவோ இருக்கும்.

இப்படி பல விதமாக கேட்கும் ரயில் ஓசைக்கு பின்னால் பல விதமான தகவல்கள் உள்ளன.

அதாவது ஒரு ரயில் ஒரே ஒரு ஹார்ன் சத்தம் எழுப்பியபடி நகர்ந்தால் அதனை சுத்தம் செய்ய ரயில்வே யார்டுக்கு எடுத்து செல்கின்றனர் என்று அர்த்தம்.

இரண்டு முறை குறுகிய சத்தத்தை எழுப்பினால் ரயில் ஓட்டுநர் ரயில் கார்டிடம் சிக்னல் கேட்கிறார் என்று அர்த்தமாகும்.

மூன்றாவது முறை குறுகிய சத்தத்தை எழுப்பினால் ரயில் கட்டுப்பாட்டை இழந்து விட்டது என்று அர்த்தமாம்.

அந்த சமயத்தில் ரயில்வே கார்ட் உடனடியாக வேக்குவம் பிரேக்கை இயக்கி ரயிலை நிறுத்துவார்.

நான்கு முறை குறுகிய ஹாரன் சத்தம் கேட்டால் ரயிலில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டிருகிறது தொடர்ந்து அதை இயக்க முடியாது என்று அர்த்தமாகும்.

ஒரு நீண்ட மற்றும் குறுகிய ஹாரன் சத்தம் கேட்கப்பட்டால் ஓட்டுநர் ரயில்வே கார்டிடம் பிரேக்கை சரி செய்ய சொல்கிறார் என்று அர்த்தம்.

இரு நீண்ட மற்றும் இரு குறுகிய ஹாரன் சத்தம் எழுப்பப்பட்டால் ஓட்டுநர் ரயில் இன்ஜினை கட்டுபாட்டிற்குள் வைத்திருகிறார் என்பதை அவருடைய கார்டுக்கு தெரிவிப்பதாக அர்த்தமாகும்.

மிக நீளமான ஹாரன் சத்தமானது எதிர் வரும் ஸ்டேஷனில் ரயில் நிற்காது என்று பயணிகளுக்கு எச்சரிகிறது.

இரு இடை நிறுத்ததுடன் விடப்படும் ஹாரன் சத்தமானது ரயிலானது ரயில்வே கிராசிங்கை கடக்கப் போகிறது என்றும் கிராசிங்கை கடந்து செல்ல நினைக்கும் பயணிகளுக்கு எச்சரிப்பை கொடுக்கவும் எழுப்பப்படுகிறது.

இரு நீண்ட மற்றும் இரு குறுகிய ஹாரன் சத்தமானது ரயில் ட்ராக் மாற போகிறது என்று அர்த்தமாகும்.

இரு குறுகிய மற்றும் ஒரு நீண்ட ஹாரன் சத்தமானது எழுப்பப்பட்டால் யாரோ பிரேக் சங்கிலியை இழுத்து இதை நிறுத்தி விட்டார்கள் என்பதனை அறிவிக்கிறது.

6 முறை குறுகிய ஹாரன் சத்தம் எழுப்பப்பட்டால் ரயிலானது அபாய கட்டத்தில் இருக்கிறது என்பதை தெரிவிக்கிறது.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.