தேவையான பொருட்கள்
ரவை – 200 கிராம் (1 பங்கு)
சர்க்கரை – 200 கிராம் (1 பங்கு)
தண்ணீர் – 400 மி.லி. (2 பங்கு)
நெய் – தேவையான அளவு
முந்திரி பருப்பு – தேவையான அளவு (தோராயமாக 10)
ஏலக்காய் – தேவையான அளவு (தோராயமாக 4)
கேசரி பவுடர் – சிறிதளவு
செய்முறை
வாணலியில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு ரவையை வறுக்கவும். முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து வைக்கவும்.
வாணலியில் தண்ணீர் கொதித்ததும் கேசரி பவுடர் சேர்க்கவும். பின் சிறிது சிறிதாக ரவையை சேர்க்கவும். ரவை கட்டிவிழாமல் நன்கு கிளறவும்.
ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை போடவும். சர்க்கரை நன்கு இளகி கெட்டிப்படத் துவங்கும். கேசரி அடிபிடிக்காமல் இருக்க, விடாமல் கிளற வேண்டும்.
கேசரி நன்கு சேர்ந்து வந்ததும், மீதமுள்ள நெய் விட்டு கிளறி இறக்கவும். பின்னர் ஏலப்பொடி, வறுத்த முந்தரி ஆகியவற்றை சேர்க்கவும். சுவையான ரவா கேசரி தயார்.
Comments are closed.