சுவையான ரிப்பன் பக்கோடா

ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?

ரிப்பன் பக்கோடா பண்டிகை காலங்களில் எல்லோராலும் செய்யப்படும் உணவுப் பொருளாகும்.

இது சாதாரண நாட்களிலும் தயார் செய்யப்பட்டு மாலை நேர சிற்றுண்யாகவும், நொறுக்குத் தீனியாகவும் உண்ணப்படுகிறது. இதன் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்தேவையான பொருட்கள்

 

பச்சரிசி மாவு – ¼  படி (1 பங்கு)

கடலை மாவு – 1/8  படி (¼ பங்கு)

பொரிகடலை மாவு – 1/8  படி (¼ பங்கு)

மிளகாய் வற்றல் – 20 எண்ணம்

வெள்ளைப் பூண்டு – 15 பற்கள் (பெரியது)

பெருங்காயப் பொடி – ¼ ஸ்பூன்

வெண்ணெய் – 4 ஸ்பூன்

ஓமம் – 5 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

ரிப்பன் பக்கோடா செய்முறை

பச்சரிசி மாவு, கடலை மாவு ஆகியவற்றை சலித்து எடுத்துக் கொள்ளவும்.

பொரிகடலையை மிக்ஸியில் போட்டு சலித்து எடுத்துக் கொள்ளவும்.

மிளகாய் வற்றலை தேவையான தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

வெள்ளைப் பூண்டினை தோலுரித்து சுத்தம் செய்யவும்.

 

ஊற வைத்த மிளகாய் வற்றல்
ஊற வைத்த மிளகாய் வற்றல்

 

மிக்ஸியில் வெள்ளைப் பூண்டு, மிளகாய் வற்றல், தேவையான தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

 

அரைத்த பூண்டு, மிளகாய் வற்றல் விழுது
அரைத்த பூண்டு, மிளகாய் வற்றல் விழுது

 

வாயகன்ற பாத்திரத்தில் பச்சரிசி மாவு, கடலை மாவு, பொரிகடலை மாவு, பெருங்காயப் பொடி, தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து ஒரு சேர கலந்து கொள்ளவும்.

மாவுக் கலவைகள்
மாவுக் கலவைகள்

 

அதனுடன் ஓமத்தைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.

 

ஓமத்தைச் சேர்த்ததும்
ஓமத்தைச் சேர்த்ததும்

 

பின்னர் அதனுடன் அரைத்த மிளகாய் வற்றல், வெள்ளைப் பூண்டு விழுது, வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு சேர கலந்து அதனுடன் தேவையான தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து ஒருசேர மாவாகத் திரட்டவும்.

 

அரைத்த விழுது, வெண்ணெய் சேர்த்ததும்
அரைத்த விழுது, வெண்ணெய் சேர்த்ததும்

 

திரட்டிய மாவு
திரட்டிய மாவு

 

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய விடவும்.

முறுக்கு அச்சில் ரிப்பன் பக்கோடா அச்சினைப் போட்டு திரட்டிய மாவில் சிறிதளவு எடுத்து காயந்த எண்ணெயில் பிழிந்து விடவும்.

 

எண்ணெயில் வேகும் போது
எண்ணெயில் வேகும் போது

 

ஒருபுறம் வெந்ததும், திருப்பிப் போட்டு வேக விட்டு எடுக்கவும்.

இவ்வாறு திரட்டிய எல்லா மாவினையும் பொரித்து எடுக்கவும்.

சுவையான ரிப்பன் பக்கோடா தயார்.

 

சுவையான ரிப்பன் பக்கோடா
சுவையான ரிப்பன் பக்கோடா

 

இது ஆறியதும் காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்து பயன்படுத்தவும்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் ஓமத்திற்குப் பதில் எள், சீரகம் சேர்த்து ஓலை பக்கோடா தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.