தேவையான பொருட்கள்
1 ரொட்டி உதிர்த்தது
1 மேஜைக்கரண்டி பச்சை பட்டாணி
1 கராட் தீக்குச்சிகளாக வெட்டியது
1 பல்லாரி
1 தக்காளி
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – 1 டீஸ்பூன்
நறுக்கிய மிளகாய் – 2
மல்லித்தழை (நறுக்கியது) – சிறிதளவு
செய்முறை
வாணலியில் எண்ணெயை விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, நறுக்கிய மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து தாளிதம் செய்யவும்.
பச்சை பட்டாணி,நறுக்கிய கராட், பல்லாரி, தக்காளி ஆகிய காய்கறிகளையும் சேர்த்து வதக்கி, சிறு தீயில் தன் தண்ணீரில் வேக விடவும்.
தேவையான உப்பை சிறிது நீரில் கலந்து ரொட்டித் துண்டுகளுடன் சேர்த்து புட்டு மாவு போல் விரவவும்.
வாணலியில் கொட்டி காய்கறிகளுடன் புட்டு மாவு போல் உள்ள ரொட்டித் துண்டுகளை ஒன்று சேரக் கிளறி மல்லித் தழையைத் தூவி கீழே இறக்கவும். சுவையான ரொட்டி உப்புமா ரெடி.