ரோட்டோர காளான் மசாலா செய்வது எப்படி?

ரோட்டோர காளான் மசாலா என்பது தெருவோரக் கடைகளில் விற்கப்படும் உணவு வகை ஆகும்.

இது எல்லோராலும் விரும்பி உண்ணப்படுகிறது. வீட்டில் எளிய முறையில் சுவையான காளான் சில்லி செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

முட்டை கோஸ் – 500 கிராம்

மைதா மாவு – 300 கிராம்

சோள (கார்ன் ப்ளார்) மாவு – 25 கிராம்

கரம் மசாலா பொடி – 4 ஸ்பூன்

மிளகாய் வற்றல் பொடி – 3 ஸ்பூன்

இஞ்சி – சுண்டு விரல் அளவு

வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (பெரியது)

உப்பு – தேவையான அளவு

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)

காஷ்மீரி ரெட் சில்லி பொடி – 2 ஸ்பூன்

நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்

சமையல் எண்ணெய் – பொரித்து எடுக்க தேவையான அளவு

அலங்கரிக்க

கேரட் – 2 எண்ணம்

ஓமப்பொடி – தேவையான அளவு

செய்முறை

முட்டை கோஸை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

 

பொடியாக‌ முட்டைகோஸ்
பொடியாக‌ முட்டைகோஸ்

 

இஞ்சி, வெள்ளைப் பூண்டினைச் சுத்தம் செய்து விழுதாக்கிக் கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத்துண்டுகளாக வெட்டவும்.

கேரட்டை சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும்.

நறுக்கிய முட்டை கோசுடன் மைதா மாவு, சோள மாவு, 2 ஸ்பூன் கரம் மசாலா பொடி, மிளகாய் வற்றல் பொடி, இஞ்சி பூண்டு விழுது, தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.

 

தேவையான பொடிவகைகளைச் சேர்த்ததும்
தேவையான பொடிவகைகளைச் சேர்த்ததும்

 

சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்ததும்
சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்ததும்

 

வாணலியை அடுப்பில் வைத்து, சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்த மாவிலிருந்து சிறிதளவு எடுத்து சிறிய வடைகளாக தட்டிப் போடவும்.

 

வடைகள் வேகும்போது
வடைகள் வேகும்போது

 

மேற்புறம் லேசாக வெந்ததும் எடுத்து விடவும்.

இவ்வாறாக எல்லா மாவினையும் வடைகளாகத் தட்டிப் போட்டு வேக வைத்து எடுத்து ஆற விடவும்.

பின்னர் வடைகளை சிறுதுண்டுகளாக பிய்த்துப் போடவும்.

 

வடைகளை வெளியே எடுத்ததும்
வடைகளை வெளியே எடுத்ததும்

 

வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சதுரமாக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

 

 வெங்காயத்தை வதக்கும் போது
வெங்காயத்தை வதக்கும் போது

 

வெங்காயம் கண்ணாடிப் பதத்திற்கு வெந்ததும், அதனுடன் காஷ்மீரி சில்லி பவுடர், 2 ஸ்பூன் கரம் மசாலா பொடி சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.

 

கரம்மசாலா, காஷ்மீரி ரெட் சில்லி பொடி வகைகள் சேர்த்ததும்
கரம்மசாலா, காஷ்மீரி ரெட் சில்லி பொடி வகைகள் சேர்த்ததும்

 

தண்ணீர் சேர்க்க தயார்நிலையில் மசாலா கலவை
தண்ணீர் சேர்க்க தயார்நிலையில் மசாலா கலவை

 

அதனுடன் தேவையான தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து கொதித்ததும், பிய்த்த வடைகளை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்.

 

தேவையான தண்ணீர் சேர்த்ததும்
தேவையான தண்ணீர் சேர்த்ததும்

 

வடைகளைச் சேர்க்கும் போது

வடைகளைச் சேர்க்கும் போதுகெட்டிப்பதம் வந்ததும் இறக்கி விடவும். சுவையான ரோட்டோர காளான் மசாலா தயார்.

 

இறக்கும் தருவாயில் காளான் மசாலா
இறக்கும் தருவாயில் காளான் மசாலா

 

சுவையான ரோட்டோர காளான் மசாலா
சுவையான ரோட்டோர காளான் மசாலா

 

பரிமாறும் போது காளான் மசாலா வைத்து அதன் மேல் துருவிய காரட், தேவையான ஓமப்பொடி சேர்க்கவும்.

 

துருவிய காரட் சேர்த்ததும்
துருவிய காரட் சேர்த்ததும்

 

ஓமப்பொடி சேர்த்ததும்
ஓமப்பொடி சேர்த்ததும்

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மைதா மாவிற்கு பதில் கோதுமை மாவு சேர்த்து காளான் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.