அதிகாலை 5.00 மணிக்கு கொல்லைப்புற வாசலைத் திறந்து வைத்து அதன் பின்னரே தலைவாசலைத் திறக்க வேண்டும்.
அதிகாலை விழித்தவுடன் பசுவையாவது, தன் முகத்தையாவது, தன் வலது உள்ளங்கையையாவது முதலில் பார்த்து விட வேண்டும்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.
வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
ஒவ்வொரு பௌர்ணமி அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து பால், பாயாசம், கல்கண்டு, கனி வகை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உண்ண வேண்டும்.
வைரம், வெள்ளி பாத்திரங்கள் லட்சுமி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்கக் கூடாது. தன் காலத்திற்குப் பின்னரே அவர்களுக்குச் சேர வேண்டும், முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக் கொடுக்கலாம்.
இவை லட்சுமி கடாட்சம் பெருகும் வழிகள்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!