லெமன் ஜூஸ் செய்வது எப்படி?

லெமன் ஜூஸ் கொளுத்தும் கோடை காலத்துக்கு ஏற்ற அருமையான சாறு வகைப் பானம். இது உடலின் பி.எச் அளவை கட்டுக்குள் வைக்கிறது.

கோடை காலத்தில் உடலில் இருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான நீர்ச்சத்தை ஈடுசெய்ய இதனை அடிக்கடி தயார் செய்து உண்ணலாம்.

மேலும் எலுமிச்சை ஜூஸில் உள்ள விட்டமின் சி உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை வழங்குகிறது.

எலுமிச்சை பழம் ஏனையப் பழங்களைவிட விலை குறைந்தும், எண்ணிக்கையில் அதிகரித்தும் காணப்படுவதால் இதனை எல்லோரும் வாங்கி பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறு தயார் செய்யும் முறையும் எளிது.

அசைவ விருந்துகளின் போது உணவிற்குப் பின் எலுமிச்சை ஜூஸ் குடிப்பது நம்மிடையே வழக்கத்தில் உள்ளது. ஏனெனில் எலுமிச்சை சாற்றிற்கு செரிமான சக்தி அதிகம்.

உடலுக்கு அதிக நன்மை தரும் லெமன் ஜூஸ் இங்கே குறிப்பிட்டப்பட்டுள்ளவாறு தயார் செய்து உண்ணும் போது சுவையோடு அதனுடைய மருத்துவ‌ப் பண்புகளையும் நாம் பெறலாம்.

இனி சுவையான லெமன் ஜூஸ் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

லெமன் ஜூஸ் செய்ய‌ தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்

எலுமிச்சை பழம் – 1 எண்ணம் (நடுத்தர அளவுடையது)

வெள்ளை சர்க்கரை – 8 ஸ்பூன்

உப்பு – 1/2 ஸ்பூன்

தண்ணீர் – 4 டம்ளர்

செய்முறை

முதலில் எலுமிச்சை பழத்தை கைகளுக்குள் வைத்து நன்றாக தேய்த்துக் கொள்ளவும்.

பின்னர் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டவும்.

துண்டுகளாக்கப்பட்ட எலுமிச்சை
துண்டுகளாக்கப்பட்ட எலுமிச்சை

எலுமிச்சை விதைகளை நீக்கி விட்டு கைகளாலோ, கரண்டியாலோ எலுமிச்சை சாற்றினை ஒரு பாத்திரத்தில் பிழிந்து கொள்ளவும்.

எலுமிச்சைச் சாறு
எலுமிச்சைச் சாறு

பின்னர் அதனுடன் வெள்ளை சர்க்கரை 8 ஸ்பூன், உப்பு 1/2 ஸ்பூன் சேர்க்கவும். கரண்டியால் கலவையை நன்கு கலக்கி விடவும்.

சர்க்கரைச் சேர்க்கும் போது
சர்க்கரைச் சேர்க்கும் போது
உப்பைச் சேர்க்கும் போது
உப்பைச் சேர்க்கும் போது

பின்னர் அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கரண்டியால் நன்கு கலக்கிக் கொள்ளவும்.

கலக்கும் போது
கலக்கும் போது

அதனுடன் மீதமுள்ள 3 டம்ளர் தண்ணீரைச் சேர்க்கவும்.

தண்ணீரைச் சேர்க்கும் போது
தண்ணீரைச் சேர்க்கும் போது

சர்க்கரை மற்றும் உப்பு கரைந்ததும் டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்.

சுவையான லெமன் ஜூஸ் தயார்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக மண்டை வெல்லத்தைப் பயன்படுத்தி ஜூஸ் தயார் செய்யலாம்.

எலுமிச்சை பழம் லேசாக வாடியிருந்தால் குளிர்ந்த தண்ணீரில் 10 நிமிடங்கள் பழத்தை ஊற வைத்து பின்னர் நறுக்கி சாறு பிழிந்தால் சாறு நன்றாக இறங்கும்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: