லேகியம்

மூலிகைச் சரக்குகளைச் சூரணமாக்கி சர்க்கரைப்பாகு, தேன், நெய் ஆகியன சேர்த்து இளகலாகக் கிண்டி எடுத்து உண்ணக் கொடுக்கப்படுவது லேகியம் எனப்படும். இவ்வாறு தயார் செய்யப்படும் லேகியத்தை ஆறு மாதங்கள் உபயோகப்படுத்தலாம்.

 
அமுக்கரா லேகியம்

கிராம்பு – 1 பங்கு

சிறுநாகப்பூ – 2 பங்கு

ஏலம் – 4 பங்கு

மிளகு – 8 பங்கு

திப்பிலி – 16 பங்கு

சுக்கு – 32 பங்கு

அமுக்கரா – 64 பங்கு

சர்க்கரை – 128 பங்கு

மேற்கண்ட சரக்குகளைச் சூரணம் செய்து சர்க்கரைப் பாகிலிட்டு லேகிய பதத்தில் கிண்டி இறக்கி வைத்துக் கொண்டு தேவையான அளவு தேன், நெய் ஆகியன சேர்த்துக் கொள்ளவும்.

இந்த லேகியத்தில் இருந்து 2 முதல் 4 கிராம் வரை தினமும் இரு வேளை உண்ண வேண்டும். இவ்வாறு செய்ய இரத்த சோகை, உடல் வன்மைக் குறைவு, வாய்வு, கைகால் எரிச்சல் ஆகியன தீரும்.

 

பஞ்ச தீபாக்கினி லேகியம்

சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் ஆகியவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். 2.8 லிட்டர் பசும்பாலில் 230 கிராம் பனை வெல்லம், பொடி வகைகள் சேர்த்துக் கரைத்து வடிகட்டி அடுப்பேற்றி லேகிய பதத்தில் இறக்கிக் கொண்டு தேன், நெய் ஆகியன தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்.

மேற்கொண்ட லேகியத்தில் இருந்து தினமும் இருவேளை 3 முதல் 6 கிராம் வரை உண்ண வேண்டும். இதனால் வாந்தி, வயிற்றுப் பொருமல், உடல் வலி ஆகியன தீரும்.

 

தேற்றான் கொட்டை லேகியம்

தேற்றான் கொட்டை – 175 கிராம்

சுக்கு – 17.5 கிராம்

மிளகு – 17.5 கிராம்

திப்பிலி – 17.5 கிராம்

கடுக்காய் – 17.5 கிராம்

தான்றிக்காய் – 17.5 கிராம்

நெல்லிவற்றல் – 17.5 கிராம்

மேற்கூறிய வகைகளை பொடித்துக் கொள்ளவும். 1400 மில்லி லிட்டர் பாலுடன் 140 கிராம் சர்க்கரை சேர்த்து பாகுப் பக்குவத்தில் காய்ச்சி பொடித்த சரக்குகளை இட்டுக் கிளறி லேகியமாக கிளறி இறக்கவும்.தேவையான அளவு தேன், நெய் ஆகியன சேர்த்துக் கொள்ளவும்.

இந்த லேகியத்திலிருந்து 3 முதல் 6 கிராம் வரை எடுத்து தினமும் இருவேளை உண்ணவும். இதனால் உடல் இளைப்பு, மூலநோய், உடல்வன்மைக் குறைதல், என்புச்சுரம் ஆகியன தீரும்.

 

இஞ்சி லேகியம்

இஞ்சிச் சாறு – 2.8 லிட்டர்

கண்டங்கத்தரிச் சாறு – 2.8 லிட்டர்

நெருஞ்சிச் சாறு – 2.8 லிட்டர்

முள்ளங்கிச் சாறு – 2.8 லிட்டர்

பழச் சாறு – 2.8 லிட்டர்

பசும் பால் – 2.8 லிட்டர்

பனை வெல்லம் – 250 கிராம்

சுக்கு – 35 கிராம்

மிளகு – 35 கிராம்

திப்பிலி – 35 கிராம்

ஏலம் – 35 கிராம்

வாய்விடங்கம் – 35 கிராம்

கிராம்பு – 35 கிராம்

தாளிசம் – 35 கிராம்

நெய் – 700 மில்லி லிட்டர்

மேற்கண்ட சரக்குகளை சேர்த்து முறைப்படி லேகிய பதத்தில் காய்ச்சி இறக்கிப் பின் தேவையான அளவு தேன் சேர்த்துக் கொள்ளவும்.

இந்த லேகியத்திலிருந்து தினமும் இரு வேளை 4 முதல் 8 கிராம் வரை உண்ண வேண்டும். இவ்வாறு செய்ய வாந்தி, வயிற்றுப் பெருமல், பசியின்மை, உணவில் வெறுப்பு, வயிற்றுப் புண் ஆகியன தீரும்.

 

கேசரி லேகியம்

எலுமிச்சம் பழம் – 200

நாட்டுச் சர்க்கரை – 7 கிலோ

மிளகு – 210 கிராம்

சீரகம் – 70 கிராம்

கோஷ்டகம் – 70 கிராம்

சுக்கு – 70 கிராம்

தாளிசம் – 70 கிராம்

திப்பிலி – 70 கிராம்

சாதிக்காய் – 70 கிராம்

சாதிப்பத்திரி – 70 கிராம்

மேற்கண்ட சரக்குகளை எடுத்துக் கொண்டு, எலுமிச்சை மற்றும் சர்க்கரை தவிர ஏனைய பொருட்களை சூரணமாக்கிக் கொள்ள வேண்டும். எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து சர்க்கரையை கலந்து கரைத்து வடிகட்டி அடுப்பேற்றி சூரணத்தைப் போட்டுக் கிளறி நெய் சேர்த்து கிண்டி எடுத்துக் கொள்ளவும்.

இந்த லேகியத்திலிருந்து தினமும் இருவேளை 4 முதல் 8 கிராம் வரை எடுத்து உண்ண வேண்டும். இவ்வாறு செய்ய பித்தம், வாயு, வயிற்று வலி, வாந்தி ஆகியன தீரும்.

 

One Reply to “லேகியம்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.