நம் சேமிப்பை தலையணைக்கு அடியிலோ, ஜாடியிலோ போட்டு வைக்கலாம். ஆனால் என்ன நடக்கும்?
பணம் பத்திரமாக இருக்குமா என்று கவலைப்பட்டுக் கொண்டே இருப்போம். சில நேரங்களில் எலி, பூச்சிகள் நம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தின்று விடும்.
ஒரு வேளை திருட்டு போகலாம். நாம் செலவழிக்க நினைக்கலாம். அல்லது மற்றவர் கடன் கேட்கலாம். அத்துடன் வீட்டில் சேமித்த பணம் வளராது.
பணத்தை வங்கியில் சேமித்தல் சேமிப்பதற்கு சிறந்த வழி ஆகும்.
ஏன் வங்கியில் சேமிக்க வேண்டும்?
வங்கியில் சேமிக்கும் பணம் பாதுகாப்பானது. ஏனென்றால் வங்கிகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. சேமிப்புகள் நாட்டின் வளர்ச்சிக்காக ஒருங்கிணைக்கப்படுகின்றன.
பாதுகாப்பு தவிர வங்கிகள் கணக்கில் போடும் பணத்திற்கு கட்டணம் வசூலிப்பதில்லை. அதே வேளை போட்ட பணத்திற்கு வட்டி கிடைக்கிறது. அதனால் வங்கியில் நம் பணம் வளர்கிறது.
நம் பணம் வங்கியில் இருக்கிறதென்றால் நாம் தேவைப்படும் போது அதை பயன்படுத்த முடியும். வங்கியில் நடக்கும் பரிமாற்றங்கள் வெளிப்படையானவை.
வங்கிகள் பல்வேறு சேவைகளை அளிக்கின்றன. நாம் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் குறைந்த பணத்தில் கடன் வாங்குதல் மற்றும் செலுத்துதல் சேவைகளை எளிதில் பெற முடியும்.
நம் மரணத்திற்கு பின் பணத்தைப் பெற நம் வாரிசுதாரரை நாம் நியமிக்கலாம்.
வாரிசு நியமனம் என்றால் என்ன?
வாரிசு நியமனம் என்பது வங்கி வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் ஒரு வசதியாகும். வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நபர் நியமிக்கும் வாரிசுதாரர் கணக்கு வைத்திருப்போரின் மரணத்திற்குப் பிறகு அவர் கணக்கிலுள்ள பணத்தைக் கோர முடியும். எனவே வங்கிக் கணக்கு தொடங்கும் போதே வாரிசுதாரரை நியமனம் செய்வது நல்லது.
வங்கிக் கணக்கு வைத்திருப்பதால் என்ன நன்மைகள்?
நம் வங்கிக் கணக்கில் உள்ள பணம் பாதுகாப்பாக இருக்கும்.
நமக்குத் தேவைப்படும் போதெல்லாம் வங்கியில் பணத்தைச் செலுத்தவோ எடுக்கவோ முடியும்.
நம் தேவைக்கேற்ப சேமிப்பு கணக்கு, மாதாந்திர சேமிப்புக் கணக்கு, நிரந்தர வைப்பு நிதி முதலியவற்றை வங்கியில் தொடங்கலாம். அதற்கு வங்கி வட்டி வழங்குகிறது.
நம் சம்பளம் / கூலியை நம் வங்கி கணக்கிலிருந்து நேரடியாக பெறலாம்.
ஓய்வூதியம் / கூலி முதலிய சமூக பயன்களை மின்னனுவியல் பயன் மாற்றம் முறையில் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பெறலாம்.
நாம் வங்கி மூலம் பிறருக்கு பணம் செலுத்த முடியும்.
ஒரு வங்கி கணக்கு, மற்ற அரசாங்க நிறுவனங்களும் நம்மை அறிந்து கொள்ள ஒரு அங்கீகாரம் கொடுக்கிறது.
வங்கி கணக்கு பரிவர்த்தனைகள் வெளிப்படயானவை. அதாவது பணம் செலுத்துதல், எடுத்தல், வட்டி முதலிய எல்லா விவரங்களும் நமக்கு வெளிப்படையாக இருக்கிறது.
வங்கிகள் பாகுபாடு காட்டுவதில்லை. அதாவது ஒரே வகையான வாடிக்கையாளர்களுக்கு வங்கி விதிகள் ஒன்றுதான்.
அவசியம் ஏற்பட்டால் வங்கியில் கடன் வாங்கலாம். சரியான நோக்கத்திற்காக வங்கி குறைந்த வட்டியில் கடன் தருகிறது. நாம் வங்கியில் கணக்கு வைத்திருந்தால் கடன் வாங்குவது எளிதாகும்.
வங்கியின் சேமிப்பு கணக்கு மற்ற எல்லா சேவைகளுக்கும் ஒரு திறவு கோல்.
மறுமொழி இடவும்