வங்கி சேமிப்பு கணக்கு துவங்குவது எப்படி?

வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்குவது ஒரு எளிதான செயலாகும். கணக்கு தொடங்க உள்ள படிவத்தை நிரப்பி வங்கி மேலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். சமீபமாக நீங்கள் எடுத்த உங்கள் புகைப்படம், உங்கள் அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்றையும் படிவத்துடன் இணைக்க வேண்டும்.

அவ்வளவுதான், வங்கி உங்களுக்காக ஒரு சேமிப்புக் கணக்கை ஆரம்பித்துக் கொடுத்துவிடும்.

கையில் பணமில்லாத போது வங்கிக் கணக்கு தொடங்குவது எப்படி?

இப்பொழுது வங்கிக் கணக்கு தொடங்கப் பணம் தேவையில்லை. இந்திய ரிசர்வ் வங்கி எல்லா வங்கிகளையும் பணம் இருப்பு இல்லாமலேயே சேமிப்புக் கணக்கு தொடங்க அறிவுறுத்தியுள்ளது.

அது அடிப்படை வங்கிச் சேமிப்பு கணக்கு எனப்படும். இதன்படி ஒருவர் பூஜ்ய இருப்புடன் சேமிப்புக் கணக்கு தொடங்கலாம்.

 

அடிப்படை வங்கிச் சேமிப்பு கணக்கின் சிறப்பம்சங்கள் யாவை?

அடிப்படை வங்கிச் சேமிப்புக் கணக்கு என்பது பூஜ்ய இருப்புடன் கூடிய சேமிப்பு கணக்காகும். அதில் எத்தனை முறையும் பணம் செலுத்தலாம். அதற்கு வங்கி கட்டணம் ஏதும் இல்லை.

மாதத்திற்கு நான்கு முறை பணம் எடுக்கலாம். இதற்கும் வங்கி கட்டணம் இல்லை. பாஸ் புத்தகம் ஏடிஎம் அட்டையும் கிடைக்கும். இதற்கும் கட்டணம் இல்லை.

இந்த கணக்கில் அவ்வப்போது பணம் போட்டு சேமிக்கலாம். பணம் எடுக்கலாம். (மின்கட்டணம், தொலை பேசிக் கட்டணம்) பணம் செலுத்தலாம் நலத்திட்ட உதவிகளை பெறலாம். இன்னும் எத்தனையோ.

(KYC) உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் என்றால் என்ன?
KYC விதிமுறைகளின்படி வாடிக்கையாளர் பற்றிய முழு விபரங்களையும் வங்கி தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதனால் நாம் KYC ஆவணங்களை வங்கியில் கணக்கு தொடங்கும் போது சமர்ப்பித்தல் அவசியம்.

அதாவது சமீபத்திய புகைப்படம், அடையாளச் சான்று, இருப்பிடச் சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை அடிப்படையிலும் கணக்கு தொடங்கலாம்.

மேற்கண்ட ஆவணங்கள் இல்லாதவர்கள் மகாத்மா காந்தி வேலை அட்டை அல்லது சுயசான்றளிப்பு அடிப்படையில் கணக்கு தொடங்கலாம்.

தளர்த்தப்பட்ட முறையில் தொடங்கப்பட்ட கணக்கு சிறு கணக்காகக் கருதப்படும். அது சில வரையறைகளுக்குட்பட்டது.

 

கிராமத்தில் ஒரு வங்கி கிளையும் இல்லாத போது எப்படி வங்கி கணக்கு தொடங்க முடியும்?

இப்போது வங்கி சேவைகளை பெற நம் பகுதியில் வங்கிக் கிளை இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. வங்கிகள் வணிக முகவர்களை நியமிக்கின்றன.

அவர்கள் வங்கியின் முகவர்களாக செயல்படுகிறார்கள். அவர்கள் அந்தந்தப் பகுதியை சேர்ந்தவர்கள். அப்பகுதியின் பொருளாதாரத்தில் அக்கரை கொண்டவர்கள். அவர்கள் அருகிலுள்ள கிராமங்களுக்கு வங்கி சேவையை கொண்டு செல்வார்கள்.

வங்கி அதிகாரிகள் கிராம வங்கிகளுக்கு அந்தப் பகுதிக்கான வர்த்தக தொடர்பாளரை அறிமுகம் செய்து வைப்பார்கள். கிராமப் பஞ்சாய‌த்திலிருந்தும் நாம் வணிக முகவர் பற்றிய தகவல்களை பெறலாம்.

 

வணிக முகவர் யார்? அவர் எவ்வாறு செயல்படுகின்றார்?

வங்கிகள் உள்ளுர்வாசிகளையும், மற்றவர்களையும் வணிக முகவர்களாக நியமிக்க அனுமதிக்கின்றன.

வணிக முகவர் வங்கிப் பரிமாற்றங்களுக்குத் தேவையான கையடக்க அயந்திரம் ஸ்மார்ட் அட்டை அடிப்படையிலான கருவிகள், கைபேசி முதலிய தகவல் தொடர்பு தொழில் நுட்ப சாதனங்களை உபயோகிப்பதன் மூலம் செயல்படுகின்றார்.

வங்கி சேவை இப்போது உங்கள் வீட்டு வாசலில்!

 

வணிக முகவரிடம் பணம் செலுத்தினால் அது பாதுகாப்பானதா?

வங்கி கிளை நம் பகுதியிலிருந்து தூரத்தில் உள்ளதால் வங்கிச் சேவையை நம் வீட்டு வாசலில் அளிப்பவர் தான் வணிக முகவர். அவரிடம் பணம் செலுத்துவதும் வங்கி கிளையில் பணம் செலுத்துவதும் ஒன்றுதான்.

பரிமாற்றங்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் அடிப்படையிலான சாதனங்கள் மூலம் நடப்பதால் வங்கியிலுள்ள கணக்கு பதிவேட்டில் உடனுக்குடன் சேர்க்கப்பட்டு விடும்.

வாடிக்கையாளர் வணிக முகவர்கள் மூலம் பணம் செலுத்தவோ எடுக்கவோ செய்தால் வங்கியின் சார்பில் வழங்கப்படும் ரசீது மூலம் ஒப்புகை அளிக்கப்படும்.

மேலும் நம் விரல் ரேகை அல்லது ரகசிய குறியீட்டு எண் மூலம் வணிக முகவர் பரிமாற்றங்களைச் செய்வதால் வேறு யாரும் நம் கணக்கில் ஊடுருவ முடியாது.

 

வணிக முகவர் அளிக்கும் சேவைகள் யாவை?

அதிகப் பற்று வசதியுடன் கூடிய சேமிப்புக் கணக்கு, நிரந்தர வைப்புநிதி கணக்கு, தவணைமுறை, சேமிப்புக் கணக்கு ஆகிய சேவைகளை வணிக முகவர் செய்வார்.

அத்துடன் நம் கணக்கிலிருந்து பணம் பிறருக்கு செலுத்துதல், பிறர் நமக்கு அனுப்பும் தொகையை நம் கணக்கில் ஏற்றுதல் ஆகியவற்றை அனுமதிப்பார்.

அத்துடன் விவசாயப்பற்று அட்டை மூலம் விவசாய நடவடிக்கைகளுக்கும் பொதுவான பற்று அட்டை மூலம் விவசாய சம்பந்தமில்லாத நடவடிக்கைகளுக்கும் வணிக முகவர் கடன் வழங்குவார்.

 

அதிகப் பற்று என்றால் என்ன? கடனிலிருந்து அது எப்படி வேறுபட்டது?

அவசரச் செலவுகளை சமாளிக்க சிறிய அளவு அதிகப்பற்று வசதி நம் சேமிப்புக் கணக்கிலேயே உள்ளது. அதிகப் பற்று எல்லைக்குள் நாம் தனி ஆவணங்களை சமர்ப்பிக்காமலேயே சிறு தொகையை அதிகப் பற்றாக‌ எடுக்க முடியும். ஆக இது அவசர‌ நேரங்களில் உதவும் நண்பனாய் இருக்கிறது.

அதிகப் பற்று என்று வங்கி வழங்கிய கடன். ஆகையால் அதற்கு வட்டி செலுத்த வேண்டும்.

அத்துடன் விவசாயப்பற்று அட்டை மூலம் விவசாய நடவடிக்கைகளுக்கும் பொதுவான பற்று அட்டை மூலம் விவசாய சம்பந்தமில்லாத நடவடிக்கைகளுக்கும் வணிக முகவர் கடன் வழங்குவார்.

வங்கியில் சேமிப்பு கணக்கு ஒன்று துவங்குவோம். வாழ்வில் வளம் பெறுவோம்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.