மக்காசோள உப்புமாதான்
ஆனாலும் ஊர் மணக்கும்!
உக்காந்து உருண்டை போட்டு
ஆளுக்கொன்னா குடுத்த
ஆசிரியரின் அன்பு இப்ப
இருக்குதானு தெரியலை!
ஈயத்தட்டுல ஆவி பறக்க
சோத்தைப் போட்டு
சுடச்சுட சாம்பாரை அது
மேல குளிக்க வச்சு
கை கழுவும் இடத்தில
வாத்தியாரு பிரம்போடு நின்னு
நம்ம வயிற நிறைய வச்ச
பாசம் இப்ப இருக்குதானு தெரியலை!
ஊக்கு போட்ட சட்டை
தபால் பெட்டி டவுசர்
கேலி பேச வைக்கலை
யாரும் விலகி நிக்க சொன்னதில்லை!
மூன்று வரை ஆங்கிலத்தின்
அழிச்சாட்டியம் இருந்ததில்லை!
அது ஒரு வசந்த காலம்
குழந்தைகளைக் குழந்தைகளாக
இருக்க வைத்த காலம்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
இராசபாளையம் முருகேசன் அவர்களின் படைப்புகள்
Visited 1 times, 1 visit(s) today