வஞ்சனை செய்யாதே
வல்லிய மனமே …
நெஞ்சினில் நினைப்பதெல்லாம்
வஞ்சினம் இல்லாமலே…
ஊழ்வினை வலியின்றி
ஊதாரி பழக்கமின்றி
ஊராருக்கு தீங்கின்றி
உள்ளே நன்மைகளோடே…
நாளெல்லாம் நாமே
நன்மை நினைப்போமே…
நாட்டோரும் உய்ந்திடவே
நற்செய்திகளையே பரப்பிடுவோமே…
கவிஞர் இரஜகை நிலவன்
மும்பை
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!