அன்னை தந்தை தெய்வம்
அன்பாய் வணக்கம் செய்வோம்
நம்மை ஈன்ற தெய்வம்
நம்முன் கண்ட தெய்வம்
நம்மை வளர்த்த தெய்வம்
நாளும் வணக்கம் செய்வோம்
பள்ளிக்கு ஓடிப் படிப்போம்
பலவும் கற்று முடிப்போம்
உள்ளம் குளிர நடப்போம்
ஊரில் நற்பெயர் எடுப்போம்
தலையை நிமிர்த்தி நடப்போம்
தாய்மொழி போற்றி வளர்ப்போம்
உலகப் புகழை எடுப்போம்
ஊருக் காக உழைப்போம்
– வாணிதாசன்