வணிகமும் தற்சார்பு பொருளாதரமும்

இந்த கொரோனா காலத்தில் எல்லோரும் வணிகமும் தற்சார்பு பொருளாதரமும்  பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.

தற்சார்பு பொருளாதாரம் என்பது ஒரு நபரோ, ஒரு குடும்பமோ, ஒரு ஊரோ, ஒரு நாடோ மற்ற நபரையோ, ஊரையோ, நாட்டையோ பொருளாதார உதவிக்காக எதிர்பாராமல் வாழ்வதே ஆகும்.

முந்தைய காலத்தில் தற்சார்பு பொருளாதரம் என்பதே மக்களிடையே பெரிதும் காணப்பட்டது.

ஆனால், நாளடைவில் ஒருபொருள் ஏராளமான நபர்களுக்கு தேவைப்படுகிறது என்ற சூழ்நிலையில், இங்கே தற்சார்பு பொருளாதாரம் என்பது தொலைந்து வணிகம் என்பது தோன்றியது.

நாம் இங்கே யோசிக்கலாம் வணிகமும் தற்சார்பு பொருளாதரமும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன‌ என்று.

நன்றாக உற்றுநோக்குங்கள்; உரைக்கின்றேன்!

 

பல மனிதர்களுக்கு ஒருபொருளை உற்பத்தி செய்ய இயலவில்லை; ஆனால் அப்பொருள் தேவைப்படுகிறது. ஒருவன் மட்டும் அப்பொருளை உற்பத்தி செய்ய, அங்கே தான் வணிகம் உருப்பெருகிறது.

இதனால் என்ன நேரப்போகிறது? இதில் ஒன்றும் தவறில்லையே என்று கேட்கலாம்.

அப்பொருளின் வணிகம் சாதாரண தருணத்தில் நம்மை ஒன்றும் செய்யாது.  ஆனால் நாம் பொருளாதார நெருக்கடி நேரத்தில் இருக்கும் போது நம்மைப் பெரிதும் பாதிக்கும்.

எப்படி என்று சந்தேகத்தில் நீங்கள் கேட்கலாம்.

அதாவது விளக்கமாக சொன்னால், தற்போது நிகழும் கோவிட்-19 நோயின் தாக்கத்தால், நம் நாடு பெரும் பொருளாதார இழப்பை சந்தித்திருக்கும் இவ்வேளையில் மக்களின் வேலை பறிபோக, வருமானமும் இல்லை.

சரி வங்கியில் உள்ள பணத்தை எடுக்கலாம் என்று நினைக்க, வங்கியும் செயல்படவில்லை; கைகளில் பணமும் புரளவில்லை.
இப்போது மக்கள் தங்கள் வீட்டில் உள்ள சேமிப்பை செலவு செய்கின்றனர்.

சரி இங்கே வணிகத்திற்கும், தற்சார்புக்கும் என்ன வேலை என்று நினைக்காதீர்கள்.

மக்களே நாம் தற்சார்பை இழந்து இருப்பதால் தான், இந்த நெருக்கடியான நேரத்தில் வணிகம் நம் கழுத்தை நெரிக்கிறது.

 

காரணம்

1. விலைவாசி உயர்வு

2.உற்பத்தி குறைவு

3.கையிருப்பு இல்லை

பொருள்களை கொண்டு வரவில்லை என்ற காரணத்தால் நாம் வாங்க நேரிடும் போது, அதன் விலையை உயர்த்தி விற்பனை செய்கின்றனர்.

உதாரணம் கொரோனாவால் மேற்கூறிய காரணத்தால் தங்கத்தின் விலை இன்றோ மிக அதிகம்.

அதுவே, விற்றால் குறைவான விலைக்கு வாங்கி அதிக லாபத்திற்கு விற்பனை செய்கின்றனர் பலர்.

உதாரணம் விவசாய பொருட்கள். எகா. கொரோனாவால் விற்க இயலாமல், வாங்க ஆள் இல்லாமல் நிறைய கத்திரிக்காய்கள் சேதம் என செய்தி கேட்டு இருப்பீர்கள்.

மறுபக்கம் காய்கறிகள் வரத்து குறைவால் விலை உயர்வு என்று செய்திகள் வருகின்றன.

நெருக்கடியான இந்நேரத்தில் இது தேவையா…

இந்த வியாபாரிகளால் (இடைத்தரகர்) மக்களும், உற்பத்தியாளர்களும் பெரிதும் பாதிப்பு அடைகிறார்கள்.

 

எனவே, இதற்கான தீர்வு என்ன என்று தேடி எங்கேயும் செல்ல வேண்டாம். தற்சார்பு பொருளாதாரம் தான் தீர்வு.

அப்படி என்றால் எல்லா பொருளையும் விளைவிக்க சொல்கிறாயா? இப்போதைக்கு எப்படி அது முடியும் என்று கேட்காதீர்கள்.

ஒரு பொருளை நாமே உற்பத்தி செய்து கொள்வது மட்டும் தற்சார்பு பொருளாதாரம் என்பது இல்லை. நமக்கு தேவையான பொருளை நமக்கு அருகில் உள்ளவர்களிடம் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

இறக்குமதியோ ஏற்றுமதியோ செய்யாமல் இப்போதைய நிலை போன்று நாம் உற்பத்தி செய்த பொருளை, நாமே நமக்கு அருகில் உள்ளவர்களிடம் விற்பனை செய்து கொள்ளலாம். இதுவும் தற்சார்பு பொருளாதாரமே.

தற்சார்பு பொருளாதாரத்தை ஒரு நாடும், நாட்டு மக்களும் சரியாக‌ப் புரிந்து கொண்டால் அந்நாட்டின் வளர்ச்சி அளப்பரியது.

உற்பத்தியாளர்களே விழித்துக் கொள்ளுங்கள்!

விற்பனை செய்யுங்கள்!

உங்கள் உழைப்பு வீண்போகாது!

சமூக பார்வை வேண்டும் என்றும் நம் மனதில்…..

 

சதிஷ்

அ.சதிஷ்ணா
மருந்தியல் பட்டதாரி
8438574188

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.