அரிது அரிது மானிடராய்ப்
பிறத்தல் அரிது; அதனை
அறிந்து வந்த வழி
சென்று விடு கொரோனா!
இறப்பு இயற்கைதான் – எனினும்
இப்படி கூட்டம் கூட்டமாய்
இறப்பது இனியும் வேண்டாம்;
வந்த வழி சென்று விடு கொரோனா!
சுதந்திர நாட்டில் சுற்றி வந்த மக்கள்
சும்மா கிடக்கிறோம் வீட்டிலே;
சுக்குநூறாக உடைந்தது மனம்
வந்த வழி சென்று விடு கொரோனா!
உந்தன் மடியில் மடிகின்றது
உலகம் கொஞ்சம் கொஞ்சமாக;
உலவவிடு எங்களை உற்சாகமாக
வந்த வழி சென்று விடு கொரோனா!
அஞ்சி துஞ்சுகிறோம் நாங்கள்
வீட்டிலேயே தஞ்சம் நாங்கள்;
கெஞ்சி கேட்கிறோம் கொரோனா
வந்த வழி சென்று விடு!
சென்று விடு சென்று விடு வந்த வழி
சென்றால்தான் மக்கள் வாழ வழி!
செல்வாய் என்ற நம்பிக்கையுடன்…
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!