வரகரிசி பக்கோடா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

வரகரிசி மாவு – 250 கிராம்

வெங்காயம் – 150 கிராம்

சீரகம் – 2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 10 கிராம்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெருங்காயம் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

 

செய்முறை

பச்சை மிளகாய், வெங்காயம், ஆகியவற்றை நறுக்கி, வரகரிசி மாவுடன் நறுக்கியவெங்காயம், பச்சைமிளகாய், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு ஆகிய‌ அனைத்துப் பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசையவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் மாவை பிசிறிவிட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும். சுவையான வரகரிசி பக்கோடா தயார்.