அடியவர் ஒன்றாய்
அன்புடன் கூடுவர்
கடிமலர் ஏந்தி
கருத்துடன் செல்வர்
கடுவினை களைய
கண்ணனைப் பாடி
படுதுயர் எல்லாம்
பற்றுடன் அறுப்பர்
அடைக்கலம் அடைந்து
அண்ணலின் அடியில்
தடைகளை சாய்த்து
சங்கடம் தீர்ப்பர்
விடைகளும் கிடைத்தது
வரதனின் அருளே!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com