நம்மைக் கவர்ந்து நலன்கள் தருவான் – வரதனே
இம்மை மறுமை எதிலும் துணையாய் – வரதனே
தம்மை வணங்க தரத்தை உயர்த்தும்- வரதனே
உம்மைப் பலரும் உகந்து சிறப்பர் – வரதனே
சிம்ம நடையில் சிலிர்க்கும் மிளிரும் – வரதனே
செம்மை வழங்கி செழிப்பாய் அருளும் – வரதனே
இம்பர் தழைக்க இனிதே உரைப்பேன் – வரதனே
எம்மை சபையில் எழுதி ரசிக்கும் – வரதனே!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com