வரதனை வணங்கிட

நீலமேகப் பெருமாள், திருக்கண்ணபுரம்

வரதனை வணங்கிட
வரம்தனை அருளிடு
கரம்சிரம் குவிந்திட பணிந்திட்டேன்

பரம்பொருள் அடிதனை
பலகவி படைத்திட
சரமென தொடுத்திட அழகாக

தரங்களும் உயர்ந்திட
திறமைகள் வளர்ந்திட
நரனெனை விதைத்திடு நலமாக

அரங்கனும் மகிழ்ந்திட
அரனயன் இவர்களும்
அடியவன் எமதிடம் புகுவாரே!

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com