ஆசிரியர்

வரமன்றி வேறென்ன?

முள்ளு முனையில மூணு குளம் வெட்டி வச்ச
நாட்டுப்புற பாடலையும் ருசிக்க ருசிக்க
ஊட்டிய தமிழய்யா ந.இராசய்யா

அல்ஜிப்ராவை அடி (டானிக்காக) கொடுத்து
ஆழ் மனதில் பதிய வைத்த
கணக்கு வாத்தியார் பிருத்விராஜன் ஜெயச்சந்திரன்

ஜான்சி ராணி வீரமங்கை வேலுநாச்சியார் என
வரலாற்றை கதையாக கற்பித்த செல்லப்பா வாத்தியார்

H இருக்கும் 0 இருக்கும் இருந்தாலும்
எந்த கொம்பனும் இயற்கை தவிர
H2Oவை (தண்ணீரை) உண்டாக்க முடியாது என
எளிதாக அறிவியல் சொன்ன லட்சுமி டீச்சர்

எல்லா பயல்களும் கட்டாயம் விளையாடனும் என
விளையாடச் செய்த கனிமாப்பாண்டியன்
வைத்தியலிங்கம் வாத்தியார் என

மிக சிறந்த ஆளுமைளால் நிரம்பிய
சே.சே.அரசு மேல்நிலைப்பள்ளியின்
வாழ்க்கை வரமன்றி வேறென்ன?

தகுதி உயர்ந்த ஆசிரியர்களிடம்
அடி வாங்கி படித்ததும் சுகமே!

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942

இராசபாளையம் முருகேசன் அவர்களின் படைப்புகள்