மருதாணி காய்ந்த காலங்கள் கரைந்து
இரசாயன கலவைகள் கறையாய் கரங்களில் குடியேற
அருகிருந்து குளிர் காற்று தந்த
பச்சை மரங்கள் காணாமல் போக
வீட்டுக்கு வீடு குளிரூட்டி குடியேற
மருந்தென இருந்த செடி கொடி சுமந்த
மண் தரை காணாமல் போக
காங்கீட் தரைகளில் வாக்கிங் போகும்
வழக்கம் குடியேற
நாகரீகம் நமக்களித்தது
வரமா? சாபமா?
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942