வரமா? சாபமா? வரலாறு கூறுமா?
நான் வாழும் புவியே! நீ எனக்கான
வரமா? சாபமா? வரலாறு கூறுமா?
இறகு இணைய சிறகாகும்
இரவின் பின் பகலாகும்
முறைவாக நமக்குள்ளே
போராட்டம் உருவாகும்
மலர்கின்ற பூவெல்லாம்
மணமின்றி மலடாகும் (வரமா? சாபமா?)
உறவென்று உனையாக்கி
தாயென்று மகிழ்வாக்கி
உயர்வாக நீ சுரந்த
உதிரத்தை இரையாக்கி
திறனோடு வாழ்ந்த கதை
திசைமாறிப் போனதெங்கே (வரமா? சாபமா?)
வரமென்று நீ தந்த
வாழ்வினையே எதிர்நோக்கி
மரங்களையே துணையாக்கி
மழைகொடுக்க அதைத் தேக்கத்
திறனிழந்த மானுடமோ
தேவைக்கு ஏங்கிடவே (வரமா? சாபமா?)
-இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942