வரமா? தவமா?
மகளென எனக்கு நீ
வந்து சேர்ந்தது
வரமா? தவமா?
வர மென்றால் நான்
கேட்டு பெற்றது
தவமென்றால் எனக்கு
தானாய் கிடைத்தது
வளமென நீ
என் வாழ்வில் வந்தது
வரமா? தவமா?
வெற்று மூங்கிலாய் இருந்த
என் வாழ்வில் வேணுகானமாய்
நீ பிறந்தது வரமா? தவமா?
வெளுத்து கிடந்த எந்தன்
வானில் வெண்ணிலவெனவே
நீ வந்தது
வரமா?.தவமா?
கள்ளிச்செடிகள் இருந்த
என் வீட்டில் கவின் மலரெனவே
நீ வந்து சேர்ந்தது
வரமா? தவமா?
இந்த வாழ்வினில் தந்தையாய்
எனை தலை நிமிரச் செய்ய
நீ வந்து சேர்ந்தது
வரமா? தவமா?
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!