நம் பணத்தை நாம் எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பது பற்றி அறிய முதலில் வரவு செலவு, சேமிப்பு, கடன் என்றால் என்ன என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
வருமானம் என்றால் என்ன?
சம்பளம், கூலி, விவசாயம் மற்றும் வியாபாரம் மூலம் சம்பாதிக்கும் பணம் நம் வருமானம் ஆகும்.
வருமான ஆதாரம் | தொகை (ரூபாய்) |
சம்பளம் அல்லது கூலி | 2000 |
விவசாயம் / தொழில் மூலம் ஈட்டிய பணம் | 3000 |
மொத்தம் | 5000 |
செலவு என்பது என்ன?
வெவ்வேறு வழிகளில் நாம் செலவழிக்கும் பணம் செலவு ஆகும். அதில் அத்தியாவசியமானவை. அத்தியாவசியமில்லாதவையும் அடங்கும். நம்முடைய செலவினங்களையும் பற்றி புரிந்து கொள்வோம்.
செலவுகள் (பணத்தை பயன்படுத்துதல்) | தொகை (ரூபாய்) |
உணவு, உடை, உறைவிடம் | 2000 |
கல்வி | 1000 |
திருப்பிச் செலுத்தும் கடன் | 700 |
உடல்நலக்குறைவு | 300 |
குடி, புகை, போதை பொருட்கள் | 500 |
சூதாட்டம் | 400 |
கல்யாணம், பண்டிகை மற்றும் புனிதயாத்திரை ஆகியவற்றுக்கான அதிகபடியான செலவுகள் | 1100 |
மொத்தம் | 6000 |
சேமிப்பு என்றால் என்ன?
செலவை விட வருமானம் அதிகம் வரும் போது இருக்கும் மிகை வருமானம் தான் சேமிப்பு என்பதாகும்.
முதலீடு என்பது என்ன?
பின்னால் அதிக அளவில் திரும்பக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போடு பயன்படுத்தும் பணம் தான் முதலீடு ஆகும். (எ.கா.) நிலம் வாங்குதல், வங்கியில் வைப்பு நிதி ஏற்படுத்துதல் முதலியன.
கடன் என்றால் என்ன?
வருமானத்தை விடச் செலவு அதிகமாக இருந்து நம்மிடம் சேமிப்பே இல்லாமல் இருந்தால் பணம் பற்றாக்குறை ஏற்படும். அதை சரி செய்ய வாங்கப்படும் பணம் தான் கடன் எனப்படும்.
வருமானம் | செலவுகள் | விளைவு | செயல் |
ரூ.5000 | ரூ.4000 | மிகை 1000 ரூபாய் | செல் |
ரூ.5000 | ரூ.5000 | மிகையும் இல்லை, பற்றாக்குறையும் இல்லை | யோசி |
ரூ.5000 | ரூ.6000 | பற்றாக்குறை 1000 ரூபாய் | நில் |
கடனை நிர்வகிப்பது எப்படி?
ஒரு குறிப்பிட்ட மாதத்தில் நம் வரவைவிட செலவு அதிகமாயிருந்தால், பற்றாக்குறையை முந்தைய மாதங்களின் சேமிப்பில் இருந்து நேர் செய்யலாம். சேமிப்பே இல்லையென்றால் நாம் கடனாளி ஆவதைத் தவிர்க்க முடியாது.
இது தினமும் நாம் தண்ணீரின் உபயோகத்தை நிர்வகிப்பதைப் போன்றது தான். நகராட்சித் தண்ணீர் சில நேரங்களில் நாள் முழுவதும் வரும். சில நாட்களில் வரவே வராது.
அன்று நாம் தண்ணீர் உபயோகிப்பதை நிறுத்திவிடுவோமா? இல்லையே நாம் தண்ணீர் அதிகமாக வரும் நாட்களில் சேமித்து தட்டுப்பாடு உள்ள நாட்களில் பயன்படுத்துகிறோம். இந்தச் செயல் சேமிப்பு எனப்படும்.
நம் நிதியானது கீழ்புறம் குழாய் உள்ள ஒரு பெரிய ஜாடி போன்றது. ஜாடிக்கு உள்ளே விழும் தண்ணீர் நம் வருமானம். ஜாடியிருந்து வெளியேறும் தண்ணீர் நம்முடைய செலவுகள்.
அத்தியாவசியமற்ற செலவுகளைத் தவிர்த்து சேமிப்பை அதிகரியுங்கள்.
அத்தியாவசிய செலவுக்கும், அத்தியாவசியமற்ற செலவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
அத்தியாவசியச் செலவினங்கள் என்பது நம் அடிப்படைத் தேவைகளுக்காகச் செலவழிக்கும் பணமாகும்.
உணவு, உறைவிடம், உடை, பிள்ளைகள் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிற்காகச் செலவு செய்வது தவிர்க்க முடியாத அத்தியவாசிய செலவாகும்.
நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமில்லாத பொருட்களைக் கூட, நம் மகிழ்ச்சிக்காக விருப்பத்திற்காக செலவு செய்வது அத்தியாவசியமில்லாத செலவினங்களாகும்.
மறுமொழி இடவும்