காவிரித்தாயே, நீயோ
யாவரையும் அரவணைக்க நினைக்கின்றாய்!
மனித இனமோ,
மனசாட்சியை சிறை வைக்கின்றது!
வளர்ப்பாயோ மனிதநேயத்தை
விளைநலமெனும் மனித மனத்திலே!
பொழிவாயோ இதயக் கருணையை
ஒற்றுமையாய் அனைவரும் வாழவே!
மனிதம் வாழ உயிர்கள் வாழ
தலைமுறைகள் செழிக்க
உம்மையே நாங்கள் அழைக்கின்றோம் அம்மா!
வருக வருகவே காவிரித்தாயே!
-பா.தேசப்பிரியா
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!