எதிர்காலம் என்பது
தெரிந்தோ தெரியாமலோ
இருந்து கொண்டிருக்கிறது
அதை நான்
சரி செய்வதாக நம்புகிறேன்
எனது கனவை
அதில் நான் திணிக்கிறேன்
காலத்தை அதற்குத்தோதாக
வழி நடத்துகிறேன்
எனது உளப்பூர்வமான
நடிப்பின் ஆற்றலை
வெளிப்படுத்துகிறேன்
வீட்டை விட்டு
வெளியே வருகிறேன்
வீட்டில் இருக்கிறேன்
எனது கவனத்தால்
நான் பேசாமல் இருக்கிறேன்
சுழலும் எனது கண்களை
என்றுமே பார்க்கமுடியாத
எனது ஆளுமை
ஒரு செடிபோல்
வளர்ந்து முடிந்திருந்ததை
நான் ஒரு
நிலைக்கண்ணாடியின் துணையின்றி
பார்த்துக் கொண்டேன்