பூத்த பூவை போல முகத்தை மாற்றலாம்
பொங்கிவரும் அருவி போல பேசிப் பழகலாம்
நேற்றுவரை நடந்ததெல்லாம் மறந்து போகலாம்
நித்தம் இந்த பூமியிலே நட்பைச் சேர்க்கலாம்
நாற்றைப்போல நம்மையுமே மாற்றிக் கொள்ளலாம்
நட்டுவைத்த மண்ணிற்கேற்ப நாளும் வளரலாம்
சேற்றைப்போல இருக்கும் சூழல் மாற்றப் பார்க்கலாம்
செந்தாமரைபோல் நாமும் மாற அதுவும் நடக்கலாம்
காற்றடிச்சா கலையும் மேகம் போலத்திரியலாம்
கருமேகம் விழும் மழையின் துளியுமாகலாம்
ஊற்றனெவே பிறக்கும் கவிதை சந்தமாகலாம்
ஊர்முழுக்க ரசிக்கச் செய்யும் இசையுமாகலாம்
ஏற்றபடி வாழ்வினிக்க என்ன செய்யலாம்?
எல்லாமே நல்லவையே என்று நினைக்கலாம்
சீற்றம் சினம் தூர விலக்கும் மனிதராகலாம்
சீரான வளர்ச்சிப்பாதை பயணமாகலாம்.
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)