ஏன் இந்த கோபம்?
எனக்கு இந்த சாபம்!
தேன் என இனிக்கின்ற
முகம் காட்டாத சோகம்!
வானில் விடிவெள்ளி
எழுந்துட்ட போதும்,
வார்த்தையிலே நீ
எனக்கு வாராத ஏக்கம்!
மீனெனில் வலை வீச
தானாகக் கிடைக்கும்!
மெல்லிய கீதம் எனில்
மூங்கில் அதைக் கொடுக்கும்!
கான கருங்குயிலின்
பாட்டென்றால் இனிக்கும்!
கண்மணியே உன் அருகாமை,
எனக்கதனைக் கொடுக்கும்!
சேனைகள் நால்வகையாம்;
வரலாறு காட்டும்!
சின்னவளே உனை யிங்கு
எது மீட்டு எடுக்கும்?
வாலை குமரியே உன் வடிவில்
வளர் கவிதை பிறக்கும்!
வண்ணத்தமிழ் உன் போல;
அது மலர்ந்து சிரிக்கும்!
கைபேசி: 9865802942