முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளல் பாரி. அந்த கொடிக்கு பந்தலே போட்டு கொடுத்திருக்கலாம்.
ஏன் தேர் கொடுத்தான்!
என்ன நடந்தது?
தேரில் பவனி வந்த மன்னன் தேரை ஓராமாக நிறுத்தி விட்டு காட்டுக்குள் சென்று விடுகிறான்.
ஓரிரு நாட்கள் கழித்து மீண்டும் தேர் எடுக்க வரும்போது, அதில் முல்லைக்கொடி படர்திருப்பதைக் கண்டு, தன் தேரை அந்த முல்லைக்கே தானம் தந்து அரண்மனை திரும்புகிறான்.
இதென்ன மனநிலை?
வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளல் பெருமான் மனநிலை தானே!
மனிதன் மனிதனை நேசிப்பது மானுடநேயம். இது அதற்கும் மேலாக அனைத்து உயிர்களையும் நேசிக்கும் உன்னதமான நிலை.
இன்று இவை தேய்ந்து சுய இலாப மனநிலை பரவியது எப்படி?
தான் வாழ எவரையும் எதனையும் அழிக்கலாம் என்ற மனநிலை பரவியது எப்படி?
சற்று சிந்தித்துப் பார்க்க விடையேதும் கிடைக்கவில்லை.
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942