வழிபாட்டுக் குறிப்புகள் என்பவை நாம் இறைவனை வழிபடும்போது பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் ஆகும்.
சடங்குகளுக்கு அப்பாற்பட்டவன் இறைவன். ஆனாலும் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் சில குறிப்புகளை நாமும் அறிந்து கொண்டு செயல்படுவதில் தவறில்லை.
வழிபாட்டின் துவக்கத்திலும், கணபதி வழிபாட்டின் போதும் தூப தீபம் முடியும் போதும், பலி போடும் போதும் கை மணியை அடிக்க வேண்டும்.
மணியின் சத்தத்தோடு செய்யப்படும் வழிபாடு நல்ல பலன் தரும்.
கோயில்களில் அர்ச்சகளிடமிருந்து தான் பிரசாதங்களை வாங்க வேண்டும். நாமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
பெருவிரலும், மோதிர விரலும் சேர்த்துத் திருநீறு அணிய வேண்டும். மற்ற விரல்களை சேர்க்கக் கூடாது.
திரவிழாக் காலத்திலும், வீதி வலம் வரும்போதும் பரிவார தெய்வங்களின் அலங்காரத்திலும் மற்றைய நாட்களிலும் உபயோகிக்க தகாதென விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.
வழிபாட்டிற்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், வாழை, கொய்யா, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம் ஆகியவை ஆகும்
செண்பக மொட்டு தவிர வேறு மலர்களின் மொட்டுக்கள் வழிபாட்டிற்கு உகந்தவை அல்ல
மலர்களை கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம், துளசியை மாலையாகவே சாற்றி வழிபடலாம்.
முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா ஆகியவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவ வழிபாட்டிற்கு உகந்தவை.
துளசி, மகிழம், செண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மரிக்கோழுந்து, மருதாணி, தாபம், அருகு, நாயுருவி, விஷ்ணுகிராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் வழிபாட்டுக்கு உகந்தவை.
குடுமியுள்ள தேங்காயை சமமாக உடைத்து குடுமியை நீக்கிவட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.
வழிபாட்டிற்கு உதவாத மலர்கள் வாசனை இல்லா மலர்கள், முடி புழுவோடு சேர்ந்தது, வாடிய மலர்கள், நுகரப்பட்ட மலர்கள், தரையில் விழுந்த மலர்கள்
தாமரை, நீலோத்பலம் போன்ற மலர்களை பறித்த அன்றொ வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டியது இல்லை.
ஒருமுறை இறைவனின் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை மீண்டும் வழிபாட்டிற்கு பயன்படுத்தக் மூடாது.
மலர்களை முழுவதுமாக பூஜிக்க வேண்டும்.
துலுக்க சாமந்தி பூவை பூஜைக்கு பயன்படுத்தக் கூடாது.
பவள மல்லியை சரஸ்வதிக்கு பயன்படுத்தக் கூடாது
தும்பை லட்சுமிக்கு பயன்படுத்தக் கூடாது.
அருகம்புல் அம்பிகைக்கு பயன்படுத்தக் கூடாது.
அட்சதையால் திருமாலுக்கு பயன்படுத்தக் கூடாது.
விநாயகருக்கு துளசி மாலை பயன்படுத்தக் கூடாது.
சிவனுக்கு தாழம்பூ பயன்படுத்தக் கூடாது.
வழிபாட்டுக் குறிப்புகள் நம் ஆன்மிகம் நெறிப்பட உதவும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!