வீதிக்கு வீதி வாசக சாலை வேணும் தம்பி
வளரும் இளையோர் பயில நூல்பல இருக்கனும் தம்பி
சாதிமதங்கள் கடந்திடும் பாலம் வாசிப்பினால் வருமே என்ற
சரித்திர உண்மை உணர்ந்திட நீ வாசக சாலை நாடு
முன்னேற்றம் தந்திடும் அறிவுப் புதையல்
மூத்தோர் கட்டிய வாசக சாலை நாளும் காத்திடு
ஆதியில் முன்னோர் சொன்ன கதைகள் எல்லாம்
அறிவியல் துணையோடு ஒப்பிட்டே நம்பிடு
நீதியின் வழியில் வாழ்வினை அமைத்திட
நித்தமும் பல்துறை நூல்களைப் படித்திடு
போதிமரத்தால் புத்தன் ஞானம் பெற்றான்
புத்தகத்தால் ஞானம் பெற நீ வாசக சாலை நாடு
–இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!