வாடிக்கை

“இனி என் பின்னால் வராதே”
என்ற குரலில்,

“என் பின்னால் அலைந்து
கெஞ்சிக்கேட்கும் வரை
மனமிறங்க மாட்டேன்”
என்று சிரிக்கிறது
அவள் மனம்.

‘வராதே!’ என்று முகம் சுழித்து
அவன் கண்ணில் அகப்படாத
புன்னகை ஒன்றை
இதழோரம் சூடிச்செல்லும்
பெண்ணிடம்

‘நான்’ என்ற அகந்தை
அவள் பாதங்களில்
அழியும் வரை
ஓய்வதில்லை இந்த யுத்தம்

மிஞ்சினால் கெஞ்சுவதும்
கெஞ்சினால் மிஞ்சுவதும்
காதலின் வாடிக்கை.

ஜி.ஏ. கௌதம்
சென்னை
கைபேசி: 7845606321